- யூனியன் அரசு
- Ponkumar
- சென்னை
- ராஜரத்தினம் மைதான்
- எக்மோர், சென்னை
- கட்டுமானம் மற்றும் நிலத் தொழில் கூட்டமைப்பு
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- யூனியன்
- ஒன்றிய பொருளாளர் பொறியாளர்
- எஸ்.ஜெகதீசன்
- தின மலர்
சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் கட்டுமான துறையை புறக்கணித்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு பொருளாளர் பொறியாளர் எஸ்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி பொது செயலாளர் என்.சுந்தராஜ், தலைமை நிலைய செயலாளர் து.ரஜினிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தலைவர் பொன்குமார் தொடங்கி வைத்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பொன்குமார் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அரசின் பட்ெஜட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறாமல், தமிழ்நாட்டுக்கு எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யாமல், தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும், பெருவாரியான மக்களின் வேலை வாய்ப்பிற்கும் துணை புரியும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலை ஊக்கப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜிஎஸ்டியை குறைக்கவோ, கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித அறிவிப்பையும் பட்ஜெட்டில் வெளியிடாதது இந்தத் துறையை மேலும் நலிவடைய செய்யும்” என்றார்.
The post பட்ஜெட்டில் கட்டுமான துறையை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்குமார் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.