×

அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி நகை கடைக்காரரிடம் 16 சவரன் அபேஸ்: மற்றொரு கடைக்காரருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (35). இவர், வீட்டின் கீழ் பகுதியில் நகைக்கடை நடத்துகிறார். கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி இவரது நகை கடைக்கு, நன்கு அறிமுகமான வேளச்சேரியை சேர்ந்த பல்வந்த் கோட்டரி என்பவர் வந்துள்ளார். இவரும், நகைக்கடை உரிமையாளர். இவர், ஹரிஷிடம் இருந்த 16 சவரன் நகைகளை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி, நகைகளை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஆனால் சொன்னபடி நகையை விற்று பணத்தை தராமல் பல்வந்த் கோட்டரி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை ஹரிஷ் கேட்டபோதும் முறையாக பதில் அளிக்காமல் பல்வந்த் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஹரிஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி நகை கடைக்காரரிடம் 16 சவரன் அபேஸ்: மற்றொரு கடைக்காரருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Shavaran Abyss ,Perampur ,Harish ,Pulianthoppu Highway ,Palwant Kottari ,Velacheri ,
× RELATED லப்பர் பந்து படத்துக்காக விசேஷ பயிற்சி: ஹரீஷ் கல்யாண்