×

அரும்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் 7 சவரன் திருட்டு

அண்ணா நகர்: அரும்பாக்கத்தில் மூதாட்டியின் வீட்டில் இருந்த 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரும்பாக்கம் அசோக நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்மாள்(72). இந்நிலையில், மாணிக்கம்மாள் தனது நகைகளை சர்பார்க்க பீரோவை திறந்துள்ளார்.

அப்போது, லாக்கரில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மாணிக்கம்மாள் நகைகள் திருட்டு குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து நகைகள் திருட்டு குறித்து விசாரிட்டு வருகின்றனர்.

The post அரும்பாக்கத்தில் மூதாட்டி வீட்டில் 7 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Arumbakkam ,Anna Nagar ,Manikammal ,Arumbakkam Ashoka Nagar ,
× RELATED அமைந்தகரை, அரும்பாக்கத்தில்...