×

மனைவியின் நகையை மீட்க முடியாததால் கணவர் தற்கொலை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் டில்லி பாபு (45). கடன் பிரச்னை காரணமாக மனைவியின் நகையை அடகு வைத்துள்ளார். ஆனால் மீட்க முடிய முடியவில்லை. இதனால் டில்லிபாபு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து, சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். காலையில் வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது டில்லி பாபு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டில்லிபாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

The post மனைவியின் நகையை மீட்க முடியாததால் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Dilli Babu ,Puduvannarpet ,Tillibabu ,
× RELATED ராட்சசன், ஓ மை கடவுளே தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்