×

கோத்தகிரி சிறப்பு பேரூராட்சியில் ரூ.42.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கோத்தகிரி: கோத்தகிரி சிறப்பு பேரூராட்சி மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஈளாடா தடுப்பணை மற்றும் அளக்கரை குடி நீர் திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க அம்ரூத் திட்டத்தின் மூலம் 2022-23ம் ஆண்டில் கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள நகர் பகுதியில் குடிநீர் விநியோக முறையை சீரமைத்தல் பணிக்கு ரூ.42.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.பின்னர், ஈளாடா கூட்டுக்குடிநீர் திட்டத்தை பற்றி அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்து ஈளாடா தடுப்பணையில் நடைபெற்று வரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், கோத்தகிரி பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரி சிறப்பு பேரூராட்சியில் ரூ.42.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kotagiri Special Municipality ,Kotagiri ,Lakshmi Bhavya Tanneeru ,Kotagiri Special Municipal Corporation ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி