×

வல்வில்ஓரி சிலைக்கு சிறப்பு பூஜை

ராசிபுரம், ஆக.4: ராசிபுரத்தில் தர்மசம்வர்த்தினி உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் வல்வில் ஓரிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் வல்வில் ஓரி மேம்பாட்டுக்குழு சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தில் கைலாசநாதர் கோயிலில் உள்ள வல்வில் ஓரிக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். 25ம் ஆண்டாக நேற்று மேம்பாட்டுக்குழு தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பா.ம.க., நிர்வாகிகள் பொன்னுசாமி, வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வல்வில்ஓரி சிலைக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Valvilori ,Rasipuram ,Dharmasamvarthini Udanurai ,Kailasanathar ,Valvil Ori ,Rasipuram Valvil Ori Development Committee ,Adiperku Day ,
× RELATED ₹2.37 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி