- சமயபுரம்
- சாமயபுரம் மாரியம்மன் கோயில்
- மாரியம்மன் கோவில்
- ரங்கம்
- கோபாலா
- செட்டியார்
- இந்து அறநிலையத்துறை
- தின மலர்
சமயபுரம், ஆக.4: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு முன் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மாரியம்மன் கோயில் நுழைவாயில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ரங்கம் கோபால செட்டியார் என்பவர் கட்டினார். இந்து அறநிலை துறை சார்பில் அவ்வப்போது நுழைவாயில் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வக்குமார் (47) என்பவர் நெல் மூட்டைகளை கனரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நுழைவாயில் வழியாக மண்ணச்சநல்லூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது நுழைவாயில் மேல்பகுதியில் கனரக லாரியானது. இடித்ததால் இடது புறம் நுழைவாயில் தூண் சேதம் அடைந்து விரிசல் விட்டது. இதனை அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி இருபுறமும் இரும்பு பேரைகளை கொண்டு தடுப்புகள் அமைத்தனர். மேலும் கனரக லாரியை இயக்கிய உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் நெல் மூட்டைகளை மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலையில் இறக்கிவிட்டு காவல் நிலையத்திற்கு அவரை சென்று விட்டார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் சார்பில் தொழில்நுட்ப பொறியாளர்களை கொண்டு நுழைவாயிலின் மேற்பகுதியில் இருந்த விநாயகர், மாரியம்மன், முருகன் சிலை மற்றும் நுழைவாயில் மேற்பகுதியில் இருபுறமும் இருந்த பூத பொம்மைகள் அகற்ற முடிவு செய்தனர்.
முதல் கட்டமாக நுழைவாயில் மேல்புற பகுதியில் செல்லும் அனைத்து மின் வயர்களின் மின்சாரத்தை தடை செய்தனர். அதனைத் தொடர்ந்து மின் வயர்கள் கேபிள் வயர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆலோசனைப்படி சிறு சேதாரமின்றி மூன்று சிலைகள் பூதம், பொம்மைகளை பத்திரமாக ராட்சத கிரேன் உதவியுடன் எடுத்து வாகனங்களில் வைத்து மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். மேலும், மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்பு துறையினரும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் நுழைவாயிலை மற்ற கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் இடித்தனர். இதனால் அப்பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
The post கனரக லாரி மோதியதால் விரிசல் ஏற்பட்ட சமயபுரம் நுளைவு வாயில் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.