திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அதிமூர்த்தி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவியை அடிக்கடி தனது அறைக்கு அழைத்து தலைமையாசிரியர் பேசுவாராம். இதேபோல் நேற்று முன்தினம் சாக்லேட் தருவதாக கூறி அந்த மாணவியை ஆஞ்சநேயலு கவுட் தனது அறைக்கு அழைத்துள்ளார். அதை நம்பி சென்றபோது மாணவிக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார். பின்னர் மாணவி வீடு திரும்பிய நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் கேட்டபோது, ஹெச்எம் தன்னிடம் தவறாக நடந்தை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனர். பின்னர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று ஆஞ்சநேயலு கவுட்டை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இதேபோன்று பல மாணவிகளை அவர் சாக்லேட் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. இந்நிலையில் நேற்று கைதான ஹெச்எம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பள்ளியின் லைசென்சை ரத்து செய்யக்கோரியும் நேற்று மாலை மகளிரமைப்பினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post சாக்லேட் கொடுப்பதாக அழைத்து; 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்:ஹெச்எம் அதிரடி கைது appeared first on Dinakaran.