×

யூடியூபர் சங்கர் மீண்டும் கைது

கோவை: யூடியூபில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். சென்னையை சேர்ந்த யூடியூபர் சங்கர் சில மாதங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பெண் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார்.

இதனையடுத்து கோவை போலீசார் சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இது தவிர சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கும் பதிவு செய்துள்ளனர். யூடியூபர் சங்கர் பெண் பத்திரிகையாளர் குறித்து இழிவான கட்டுரையை வெளியிட்தாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதுவரை, ஐந்து வழக்குகளில் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யூடியூபர் சங்கர், யூடியூபில் பசும்பொன் தேவரை பற்றி அவதூறாக பேசியது காரணமாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று இரவு யூடியூபர் சங்கரை கைது செய்தனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post யூடியூபர் சங்கர் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,KOWAI ,YOUTUR SANKARA KOWA ,PASUMBON ,YOUTUBE ,Chennai ,
× RELATED அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர்...