பள்ளிபாளையம், ஆக.3:பள்ளிபாளையம் அடுத்துள்ள ரங்கனூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் வெப்படையில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் நந்தபாலன்(21). பிளஸ்2 வரை படித்த இவர் தந்தைக்கு உதவியாக வெல்டிங் பட்டியில் வேலை செய்து வந்தார். கடந்த வியாழன் இரவு 8.30 மணி அளவில், வேலை முடித்துக் கொண்டு நந்தபாலன், தனது டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது குமாரபாளையம் ரோட்டில் ஒரு பேக்கரி கடை முன்பு சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றார். எதிரே திடீரென வந்த வாகனத்தால் நிலை தடுமாறிய நந்தபாலன், முந்திச்செல்ல முயன்ற லாரியின் பின் சக்கரத்தில் விழுந்தார். இதில் லாரியின் பின்சக்கரம் நந்தபாலன் தலை மீது ஏறியதில், தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
The post லாரியை முந்த முயன்ற வாலிபர் பலி appeared first on Dinakaran.