×

கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து வசதி: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் செய்ய ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி www.tnstc.in மற்றும் 9445014402, 9445014424, 9445014463 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

The post கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து வசதி: மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி...