×

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை : நீட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,”நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது; இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ உதவியுடன் கைது செய்ய வேண்டும்.

நீட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம். சிபிசிஐடி, ஒன்றிய விசாரணை அமைப்புகள் இணைந்து முழு ஒத்துழைப்போடு பணிபுரிந்தால்தான் குற்றவாளிகளை கண்டறிய முடியும். 2019-ல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலிசாருக்கு உத்தரவிடுகிறோம். ,”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : CPI ,iCourt ,CBCID ,Madurai ,National Examination Agency ,NEET ,Chennai ,Tarunmohan High Court Madurai ,Tamil Nadu ,CBI ,Dinakaran ,
× RELATED பொன் மாணிக்கவேலை கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் சிபிஐ வாதம்