×

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி

காந்திநகர்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் தாலுகாவில் 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மர்ம காய்ச்சலால் இறந்துள்ளனர். அந்த பகுதியில் எந்த வகையான காய்ச்சல் பரவி வருகின்றது என்பதை மருத்துவர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள தாலுகாவில் 22 கண்காணிப்பு குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் எச்1என்1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன்-கொங்கோ காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்றவற்றின் தடுப்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்ச் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மீனாபா ஜடேஜா, குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹிலுக்கு எழுதிய கடிதத்தில், லக்பத் தாலுகாவில் உள்ள பெக்காடா, சனந்த்ரோ, மோர்கர் மற்றும் பரவந்த் கிராமங்களில் செப்டம்பர் 3 முதல் 9 வரை 5-50 வயதுக்குட்பட்ட 12 பேர் காய்ச்சலால் இறந்துள்ளனர்.

“காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு லக்பத் தாலுகாவில் உள்ள வெர்மாநகர் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தயாபர் சிஎச்சி மற்றும் இறுதியாக பூஜ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு நோயாளி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என கூறப்பட்டுள்ளது.

The post குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandhinagar ,Lakpat Taluga ,Kutch district ,
× RELATED 21ம் நூற்றாண்டின் வரலாற்றில்...