×

ஒன்றிய குழு தலைவர் மனுக்கள் பெற்றார் பெரம்பலூர் அருகே பருவமழை நீரை சேமிக்க

பெரம்பலூர், ஆக.2: பெரம்பலூர் அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தடுப் பணை கட்டுமான பணிகள் துவங்கியது. பெரம்பலூர் மாவட்ட நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி, ஆலத்தூர் தாலுக்காவில் கொட்டரை ஆகிய பகுதி களில் இரண்டு பெரிய நீர்த் தேக்கங்களும், 33 சிறிய அணைக்கட்டுகளும் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீர்வளத்துறை சார்பாக பெரம்பலூர் தாலுக்கா, லாடபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணபுரத்திலிருந்து பச்சைமலை செல்லும் சாலையில், மயிலூற்று அருகே பொக்குணி ஆற்றின் குறுக்கே, ரூ1.8 கோடி மதிப்பீட்டில் தடுப் பணை கட்டப்பட்டு வந்தது.
இதன் கட்டுமான பணிகள் தற்போது 75 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இதே போல் வேப்பந்தட்டை தாலுக்கா, அனுக்கூர் கிராமத்தில் வேதநதி ஆற்றின் குறுக்கே ரூ3.5 கோடி மதிப்பீட்டில் தடுப் பணை கட்டப்பட்டு வந்தது. இதன் கட்டுமான பணிகள் தற்போது 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதேபோல் பெரம்பலூர் தாலுக்கா புது நடுவலூர் பச்சைமலை பகுதியில் இருந்து உற்பத்தி ஆகி வரும் மருதையாற்றின் குறுக்கே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன்நகர் அருகே ரூ3 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி கள் நடைபெற்று வந்தன. 500 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட இந்தத் தடுப்பணையின் கட்டு மானப் பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இன்னும் இரண்டு வாரங்களில் பணிகள் 100 சதவீதத்திற்கு நிறைவ டைந்து விடும் என நீர்வளத் துறையின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகருக்கு அருகே சாலை யின் மேற்குப் புறம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தத் தடுப்பணை, பருவ மழை பெய்து மருதையாற் றில் தண்ணீர் பெருக் கெடுத்துச் சென்றால் பெரம்பலூர், விளாமுத்தூர், சிறுவாச்சூர், நெடுவாசல், அயிலூர், கல்பாடி, க.எறையூர் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் படை யெடுத்துச் சென்று தடுப் பனையிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீரில் தவழ்ந்து விளையாடி குளிக்க ஏற்ற இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post ஒன்றிய குழு தலைவர் மனுக்கள் பெற்றார் பெரம்பலூர் அருகே பருவமழை நீரை சேமிக்க appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Maruthaiyar ,Perambalur District Water Resources Department ,Visuvakudy ,Veppanthatta taluk ,Kottarai ,Alattur taluk ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...