தொண்டாமுத்தூர், ஆக.2: அருந்ததியர் மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் ஆட்சியில் அவர் வழிகாட்டலில் கடந்த 2009ம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் முதல்வர் ஸ்டாலின் உறுதுணையாய் இருந்து அருந்ததிய மக்களின் சமூக நீதியை உறுதி செய்துள்ளார் என தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அருந்ததியர் மக்கள் அதிகம் வாழும் தொண்டாமுத்தூர் பாரதி காலனி மற்றும் வேடப்பட்டி பகுதியில் கொண்டாடப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலைஞர் படத்திற்கு மலர் தூவி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வக்கீல் தென்னை சிவா வரவேற்றார்.
சிறப்பு பேச்சாளராக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி உள் ஒதுக்கீடு குறித்து விரிவாக விளக்கி பேசினார். இவ்விழாவில், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மு.தியாகராஜன், தொண்டாமுத்தூர் நகர செயலாளர் டிவி குமார், பேரூராட்சி தலைவி கமலம் ரவி, துணைத்தலைவர் மு.ப.நடராசன், கவுன்சிலர்கள் ஸ்கைலாப், லிதியா மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் சின்னத்தம்பி, மருதாசலம், ஆனந்தராஜ், கிளை செயலாளர் சேகர், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ், காஞ்சனா சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேடப்பட்டியில் திமுக நகர செயலாளர் இரா.தண்டபாணி, பேரூராட்சி தலைவி ரூபினி, துணைத் தலைவி செல்வமணி, துணைச் செயலாளர் மு.ரமேஷ், பொருளாளர் கனகராஜ், செயலாளர்கள் மாறண்ணன், வெங்கடேஷ், பிரான்சிஸ், ஜெகதீஷ், முத்துசாமி, அருணகிரி, பாஸ்கரன் கவுன்சிலர்கள் அன்னக்கிளி, கீதா, அர்ஜூனன், சுமதி, அமராவதி, மோகனா, சிவசாமி, சிடிசி ரவி, நடராஜன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கோவை வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 3 சதவீத இட ஒதுக்கீடு உறுதி: அருந்ததிய மக்களுடன் திமுகவினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.