×

தொழிலக பாதுகாப்பு அலுவலக பழைய கார் ஏலம்

கோவை, ஆக.2: கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சீனிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கைவிடப்பட்ட உடைத்து எடுக்கப்படும் நிலையில் உள்ள 2007-ம் ஆண்டு மாடல் வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலம் வரும் 8-ம் தேதி காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் செயல்படும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. காரை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஏலம் விற்பனை தொகை மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து அரசுக்கு செலான் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொழிலக பாதுகாப்பு அலுவலக பழைய கார் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Industrial Security Office ,Coimbatore ,Industrial Safety and Health Joint ,Sinivasagam ,Coimbatore Industrial Safety and Health Joint ,Industrial Safety Office ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...