×

உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயதாமரை அகற்றும் பணி

கோவை, ஆக.2: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 64வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி சாலை ராமநாதபுரம் சிக்னல் அருகில் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, உக்கடம் பெரியகுளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணியையும் பார்வையிட்டார்.

இப்பணியையும் விரைவாக முடிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் பாலச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயதாமரை அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Ukkadam Periyakulam ,Agaitamar ,Coimbatore ,Trichy Road Ramanathapuram ,Central Zone ,Coimbatore Corporation ,Municipal Corporation ,Commissioner ,Sivaguru Prabhakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...