×

கார் டயர் வெடித்து விபத்து- 3 பேர் தப்பினர்

ராசிபுரம், ஆக.2: ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(42). இவர் நேற்று தனது சொகுசு காரில் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திகேயன் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

The post கார் டயர் வெடித்து விபத்து- 3 பேர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Karthikeyan ,Oduvankurichi ,Dampalayam ,
× RELATED காலபைரவருக்கு வெள்ளிக்கவசம்