×

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

ராசிபுரம், ஆக. 2: தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில நிர்வாகி இளங்கோ தலைமை வகித்தார். கூட்டத்தில், ராசிபுரம் பஸ்நிலைய மாற்ற தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும், ஏடிசி டிப்போ, ஆண்டகலூர் கேட் ஆகிய பகுதியில் பஸ் நிலையம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் நகர பகுதி மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் காவல்துறை உதவியுடன், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகலை நகராட்சியில் உள்ள காந்தி சிலையில் கோரிக்கை மனுவாக அளித்தனர்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu People's Rights Protection Center Executive Committee ,State Administrator ,Ilango ,Bus Station ,ATC Depot ,Andagalur Gate ,
× RELATED காலபைரவருக்கு வெள்ளிக்கவசம்