×

கோவை- லோக்மான்யதிலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்

சேலம், ஆக.2: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் லோக்மான்யதிலக்கிற்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோவை-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் (11014) நேற்று காலை 8.50 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அந்த ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டது. இதன்காரணமாக கோவை மற்றும் வழித்தடத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில்வே ஸ்டேஷன்களில் அந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள், ஸ்டேஷனில் 4 மணி நேரம் காத்திருந்து கடும் அவதியடைந்தனர். மறுமார்க்கத்தில், அதாவது லோக்மான்யதிலக்கில் இருந்து வந்த ரயில் தாமதமானதால், கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் தாமதமாகியது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோவை- லோக்மான்யதிலக் ரயில் 4 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Salem ,Salem Railway Division ,Lokmanya Thilak ,Maharashtra ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலைகளுக்கு பீக் ஹவர்...