- சேலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிச்சிப்பளையம் பிரதான வீதி
- பச்ச்பட்டி
- சித்தேஸ்வரா
- நாராயணநகர்
- கலம்பட்டி
- காரங்கல்பட்டி
சேலம், ஆக.2: தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் சேலத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, பச்சப்பட்டி, சித்தேஸ்வரா, நாராயணநகர், களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்பட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு: சேலம் 12.7, ஏற்காடு 4, வாழப்பாடி 10, ஆணைமடுவு 4, ஏத்தாப்பூர் 1, சங்ககிரி 2.2, இடைப்பாடி 5, மேட்டூர் 14.2, ஓமலூர் 6 என மொத்தம் 59.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் சேலத்தில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் அரை மணிநேரம் லேசான மழை பெய்தது.
The post சேலத்தில் 59.1 மி.மீ. மழை appeared first on Dinakaran.