×

பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்காக இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார். பேரிடர் மேலாண்மை சட்டம், 2005, பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்காக இயற்றப்பட்டது. பேரிடர் மேலாண்மை திட்டங்களை வரையறை செய்வதற்கும், அதை முறையாக செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கும் தேவையான வழிமுறைகளை ஏற்படுத்துவதே பேரிடர் மேலாண்மை சட்டத்தின் நோக்கமாகும்.

அதோடு மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவதும் இந்த மசோதாவின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் குழுக்களின் பணிகளில் மேலும் ஒருங்கிணைப்பை கொண்டு வரும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்காக இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Union Minister of State ,Nithyanand Roy ,Dinakaran ,
× RELATED வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி...