சேலம், ஆக.1: சேலம் குகை கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அந்த பகுதியில் ஓட்டல் மற்றும் சில்லி சிக்கன் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 25 வயது வாலிபர் போதையில் வந்தார். அவர் திடீரென அங்கிருந்த ஈஸ்வரனிடம், என்ன ஓட்டல் நடத்துகிறீர்கள்? என கேட்டு, தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த ஈஸ்வரனின் மகன் பிரவீன், அதனை தட்டிக்கேட்டார். இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரவீனை அந்த வாலிபர் வெட்டினார். அதனை தடுக்க முயன்றபோது, அவரது விரல்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ஈஸ்வரனின் மருமகளை தள்ளிவிட்டுஅங்கிருந்து தப்பினார். பின்னர் படுகாயமடைந்த ஈஸ்வரனின் மகன், மருமகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில், ஈஸ்வரினிடம் தகராறில் ஈடுபட்டது களரம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த ஆஜி (எ) ராஜ்கிரண்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஓட்டலில் தகராறு; வாலிபர் கைது appeared first on Dinakaran.