×

வயநாடு நிலச்சரிவு.. தமிழ்நாடு அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது..!!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. அதில் 10 தமிழர்களும் அடங்குவர். மேலும், 211 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

இது தொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், மாநில அரசுகள், கேரளாவுக்கு உதவி புரிந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு நேற்று தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது. மேலும், கேரள மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிதி உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவனந்தபுரம் சென்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கினார்.

The post வயநாடு நிலச்சரிவு.. தமிழ்நாடு அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Wayanad Landslide ,Government of Tamil Nadu ,Kerala ,Thiruvananthapuram ,Tamil Nadu government ,Mundakai ,Suralmalai ,Attamalai ,Wayanad district ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவில் பாதித்தோருக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி