×

கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறுகிய காலத்திற்குள் 10 இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2023 ஜூலை 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தார்கள். அன்று முதல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான வாசிப்பு போட்டிகள், விளையாட்டுப் பயிற்சிகள், பெரியோர்களுக்கான கலந்துரையாடல், பேச்சுப்போட்டி-கட்டுரை போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 10 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளார்கள்

கலைஞர் நூற்றாண்டு நூலகம் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்:
மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன.

அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தைத் தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறுகிய காலத்திற்குள் 10 இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : artist's ,century ,library ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Artist Centennial Library ,Madura ,Artist Century Library ,M. K. Stalin ,
× RELATED தினமும் கண்ணை கவனி!