×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 50 நாட்களில் ஜம்மு பிராந்தியத்தில்மட்டும் 15 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 2 அதிகாரிகள் உள்பட 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். இதைப்போல் புனித யாத்திரைக்கு சென்ற 9 பக்தர்களும் உயிரிழந்து உள்ளனர். மேலும் 58 பேர் காயம் அடைந்தனர்.

இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இப்படி அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பூஞ்சின், சலோத்ரி-மங்க்னார் பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் சிறப்பு நடவடிக்கைக்குழு என பல்வேறு துறைகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். இந்த தேடுதல் வேட்டை மாலையிலும் நீடித்ததாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. உடனே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பல தேடுதல் வேட்டை நிகழ்வுகள் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jammu and ,Kashmir ,Jammu ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி பேச்சு