மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி “சூர்யகுமார் (C), கில் (VC), ஜெய்ஸ்வால், ரின்கு, ரியான், பந்த் (WK), சஞ்சு (WK), ஹர்திக், துபே, அக்சர் படேல், சுந்தர், பிஷ்னோய், அர்ஷ்தீப், கலீல், சிராஜ்” ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கு கேப்டனாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் கில் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி; “ரோஹித் (C), கில் (VC), கோஹ்லி, ராகுல் (WK), பந்த் (WK), ஐயர், துபே, குல்தீப், சிராஜ், சுந்தர், அர்ஷ்தீப், ரியான், அக்சர், கலீல், ஹர்ஷித் ராணா” ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
The post இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.