ஜெய்ப்பூர்: தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதுபோன்ற காலங்களில், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான இடங்களில் புகுந்து விடுவது வழக்கம். இந்நிலையில்தான் ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர் நீரஜ் பிரஜாபத், ஒரு வீட்டில் சிறுவர்களின் ஷூவில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அதுபற்றிய வீடியோதான் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனே பாம்புபிடி வீரரை அழைத்துள்ளார். அவர் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது. அந்த பாம்பை நீரஜ், லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பட்டனை அழுத்தி உள்ளனர்.
The post ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு appeared first on Dinakaran.