×
Saravana Stores

உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; 22 பேர் காயம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மற்றும் ஜிலாகி ரயில் நிலையங்களுக்கிடையே சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு மாநில மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சண்டிகர் – திப்ரூகர் பயணிகள் விரைவு ரயில் கோண்டா மாவட்டம் அருகே சென்றுகொண்டிருந்த போது ரயில் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. 4 ஏ.சி பெட்டிகள் உள்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 22-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட வழித்தடத்தில் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் -திப்ரூகர் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணித்தவர்களின் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தின்சுகியா – 9957555984, பர்காடிங் – 9957555966, மரியானி – 6001882410, சிமல்குரி – 8789543798, திப்ரூகர் – 9957555960, குவாஹாத்தி ரயில் நிலையம் 0361-2731621, 2731622, 2731623 எண்களில் உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Dibrugarh rapid train derailment accident ,Uttar Pradesh ,Lucknow ,Chandikar ,Dibrugarh ,Gonda ,Jilagi ,Dinakaran ,
× RELATED உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!!