- அமைச்சர்
- மூர்த்தி
- சென்னை
- வர்த்தக வரி அமைச்சர்
- மற்றும் பதிவுகள்
- ஸ்ரீ. பி. மூர்த்தி
- நந்தனை ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம்
- சென்னை, சென்னை
- மாவட்ட பதிவாளர்கள்
- நிர்வாகம்
- தின மலர்
சென்னை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (18.07.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள். மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது பதிவுத்துறையில் பணியின்போது மறைவுற்ற இரண்டு பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.பதிவுத்துறையில் நிகழும் நிதி ஆண்டில் (2024-2025) நேற்று (17.07.2024) வரை ரூபாய்.5920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது இது கடந்த நிதி ஆண்டின் வருவாய் உடன் ஒப்பிடுகையில் ரூபாய்.821 கோடி அதிகம் ஆகும்.
அமைச்சர் அவர்களின் கடந்த ஆலோசனை கூட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த அலுவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவுசெய்யும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆவணம் பதிவு செய்தல், ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைத்தல், போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு. பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய், கடந்த ஆண்டை விட ரூ.821 கோடி அதிகம் : அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.