×
Saravana Stores

சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்..!!

டெல்லி: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சந்திமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இடைக்கால ஜாமீன் என்பது இந்த வழக்கிற்கு மட்டும்தான்; மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்புக் காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகியிருந்தால் இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Tags : Chawku Shankar ,Delhi ,Supreme Court ,Chavik Shankar ,Madras High Court ,Chavuk Shankar ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...