பெங்களூரு: வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு ஜி.டி. மால் ஒருவாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பத்துடன் வந்த விவசாயி வேட்டி அணிந்திருந்ததால் தனியார் வணிக வளாகம் அனுமதி மறுத்தது. தனியார் வணிக வளாகத்தை கண்டித்து பலரும் வேட்டி அணிந்து சென்று போராட்டம் நடத்தி வந்தனர்.
ஹாவேரி மாவட்டம் அரேமல்லபூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், பெங்களூரு மாகடி சாலையில் பெற்றோருடன் ஜி.டி. மாலுக்கு திரைப்படம் பார்ப்பதற்காக வந்தார். வணிக வளாகத்திற்குள் நுழையும் போது, வெட்டி கட்டி வந்த நாகராஜின் தந்தையை(பகீரப்பா) பாதுகாவலர் தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தாலும் கூட, அவர்களுக்கு மாலுக்கு வர மறுக்கப்பட்டது. மாலில் வேட்டியுடன் நுழைய அனுமதி இல்லை என்றும், அதுதான் ஜி.டி. மாலின் கொள்கை எனவும் கூறப்படுகிறது. மாலுக்குள் செல்ல விரும்பினால், அவரது உடைகளை மாற்றிக்கொண்டு கால்சட்டை அணியுமாறும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்திய பாரம்பரியம் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்ததற்காக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மால் நிர்வாகத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு ஜி.டி. மால் ஒருவாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மால் கலாச்சார உடைகளை அவமதிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வீடியோ வைரலாகி பல தரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததையடுத்து வயதான விவசாயி பகீரப்பாவை அவமானப்படுத்திய அதே வணிக வளாகத்தின் ஊழியர்கள், அவரை கௌரவித்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, வணிக வளாகத்தின் பொறுப்பாளர் தனது ஊழியர்களின் அநாகரிகமான நடத்தைக்கு பக்கீரப்பாவிடம் மன்னிப்பு கேட்டார்.
The post வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு ஜி.டி. மால் ஒருவாரம் மூட அரசு உத்தரவு appeared first on Dinakaran.