×
Saravana Stores

கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற அருவியாகும். தமிழில் வெளியான வாரிசு படத்தில் நடிகர் விஜய், அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்ததும் உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே தகவலின் பேரில் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் மீட்டனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாக கொண்ட அன்வி காம்தரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kumbe falls ,Mumbai ,Maharashtra ,India ,Vijay ,Insta ,Kumbe ,
× RELATED வேட்பு மனு தாக்கல் நாளையுடன்...