×
Saravana Stores

நீட் முறைகேடு: பீகாரில் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

டெல்லி: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் போது பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வினாத்தாள் கசிவு என்பது பெரும் மோசடியாக உள்ளது. இது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு, தேசிய தேர்வு முகமை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் தேசிய தேர்வு முகமை தனது பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில்;
பீகார் மாநிலத்தை பொறுத்தவரையில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 17 மாணவர்களில் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வு முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post நீட் முறைகேடு: பீகாரில் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : NATIONAL SELECTION AGENCY ,Delhi ,National Examination Agency ,Supreme Court ,Bihar ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...