- தமிழ்நாடு காவல்துறை
- துப்பாக்கி
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாகஜன் சமாஜ் கட்சி
- ஆம்ஸ்ட்ராங்
- பெரம்பூர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.
இதேபோல் சட்டம் ஒழுங்கு புதிய கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஎஸ்பி.க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தார்.
டிஜிபி அறிவுறுத்தலை அடுத்து எஸ்.ஐ. முதல் டி.எஸ்.பி. வரை காவல்துறையினருக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
The post டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.