வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பைடன் ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அதிபர் பதவிக்கான தேர்தலில் ஈடுபட்டிருந்த ஜோ பைடன் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லாஸ் வேகாஸில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்” என்று தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் நலமாக இருப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வதாகவும் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.
The post அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று: வெள்ளை மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.