×
Saravana Stores

பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு

 

போடி, ஜூலை 18: தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்கபுரம் அழகர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மனைவி செல்வி (54). இவரது மகன் பிரித்விராஜ். இவர் திருப்பூரில் தீயணைப்புத்துறையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் போத்தல்ராஜ் மகன் தேவா. இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தேவாவின் தம்பி கண்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக் ஆகிய இருவரும் செல்வியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, ஆபாசமாக பேசியதுடன் செல்வியை சராமரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த மருமகள் ஓவியாவையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் செல்வி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் செல்வியை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீசார் கார்த்திக் மற்றும் கண்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Subpaiah ,Rasingapuram Alagarswamy Temple Street ,Bodi, Theni district ,Prithviraj ,Tirupur ,Bothalraj ,
× RELATED புகையிலை விற்றவர் கைது