நாமக்கல், ஜூலை 18: நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளோரும் சந்திக்கும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (19ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கு பெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதில் பங்கேற்று வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.