- புதிய பாரத் எழுத்தறிவு திட்டம்
- மல்லசமுத்திரம்
- மோரங்கம்
- மின்னம்பள்ளி தொடக்கப் பள்ளிகள்
- பிராந்திய
- வள மையம்
- மேற்பார்வையாளர்
- சுரேஷ்
- மாவட்ட கல்வி அலுவலர்கள்
- கோபால கிருஷ்ணமூர்த்தி
- சக்திவேல்
- புதிய பாரத எழுத்தறிவு திட்ட துவக்க விழா
- தின மலர்
மல்லசமுத்திரம், ஜூலை 18: மல்லசமுத்திரம் அருகே மின்னாம்பள்ளி, மொரங்கம் தொடக்க பள்ளிகளில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா நடந்தது. வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில் எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாத கற்போர்களுக்கு உயிர்மெய் எழுத்துக்கள், குறியீடுகள் 1100 வரை எண்கள், கடிகாரம் பார்ப்பது, பசுமை தோட்டம், நாட்காட்டி போன்ற தலைப்புகளில் கற்பிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், சுமதி, இப்பள்ளியை சார்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா appeared first on Dinakaran.