- மாவோயிஸ்டுகள்
- மகாராஷ்டிரா-சத்தீஸ்கர்
- கச்சிச்சிரோலி
- வந்தோலி கிராமம்
- மகாராஷ்டிரா
- சத்தீஸ்கர்
- மகாராஷ்டிரா - சத்தீஸ்கர்
- தின மலர்
கட்சிரோலி: மகாராஷ்டிரா – சட்டீஸ்கர் எல்லையில் கட்சிரோலியில் போலீசார் – மாவோயிஸ்ட் இடையே 6 மணி நேரத்துக்கு மேல் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் எல்லையில் உள்ள வாண்டோலி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கட்சி ரோலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் அதிரடி படை குழுவினர், மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ள பகுதிக்கு நேற்று காலையில் சென்றனர்.
அங்கு வாண்டோலி கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்த பகுதியை போலீஸ் படை சுற்றி வளைத்தது. போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸ் படையினர் மாவோயிஸ்ட்டுகள் இருந்த இடத்தின் அருகே சென்றபோது, அவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. நேற்று மதியம் துவங்கிய சண்டை, மாலை வரை நீடித்தது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. போலீசாரின் என்கவுன்டரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
The post மகாராஷ்டிரா – சட்டீஸ்கர் எல்லையில் 12 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை: போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.