×
Saravana Stores

கன்னடர்களுக்கு 50% வேலைகளை அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பின்வாங்கியது கர்நாடக அரசு

பெங்களூரு: கன்னடர்களுக்கு 50% வேலைகளை அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கர்நாடக அரசு பின்வாங்கியது. கன்னடர்களுக்கே 50% வேலைகளை ஒதுக்க வேண்டும் என்ற மசோதா, விரிவான ஆலோசனைக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என கர்நாடக அமைச்சர் உறுதியளித்துள்ளார். கர்நாடக அரசின் புதிய மசோதாவுக்கு உயிரி தொழில்நுட்ப மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் அதிபர் மஜும்தார் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னடர்களுக்கு 50% வேலை அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஐ.டி. நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களையே 50% பணிகளில் நியமிக்க கட்டாயப்படுத்தினால் தொழில்நுட்ப திறனாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு விடும் எனவும் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாவிட்டால் ஐ.டி. நிறுவனங்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான மோகன்தாஸ் பையும் அரசின் வேலை ஒதுக்கீட்டு யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கன்னடர்களுக்கு 50% வேலைகளை அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பின்வாங்கியது கர்நாடக அரசு appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Gannadians ,Bangalore ,Kannada ,Karnataka ,minister ,Gannada ,Kannadans ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை...