×
Saravana Stores

அரசு வேலை வாங்கித்தருவதாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ₹22 லட்சம் மோசடி ரிடையர்டு ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு கைது

வேலூர், ஜூலை 17: ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹22 லட்சம் மோசடி செய்த ரிடையர்டு ரயில்வே பாதுகாப்புப்படை ஏட்டு கைது செய்யப்பட்டார். காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரன்(70). ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு. பள்ளிகொண்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன்(63). இவரது மகன் இளவரசனுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ₹22 லட்சம் செலவாகும் என்றும் அன்பழகனிடம் சந்திரன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அன்பழகன் ₹22 லட்சம் பணத்தை சந்திரனிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்திரன் சொன்னபடி, அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அன்பழகன், சந்திரனிடம் பணத்தை திரும்பத்தர வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால் வேதனையடைந்த அன்பழகன், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். தொடர்ந்து இந்த வழக்கை குற்றப்பிரிவு டிஎஸ்பி விசாரிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சந்திரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அன்பழகன் தரப்பிலும் ஐகோர்ட்டில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், வேலூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி சாரதி, இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான குழுவினர் சந்திரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கித்தருவதாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ₹22 லட்சம் மோசடி ரிடையர்டு ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு கைது appeared first on Dinakaran.

Tags : Retired Railway Security Force ,Vellore ,Chandran ,Gadbadi Bharati Nagar ,Retired ,Railway Security Force ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...