நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும், பொது நிர்வாகவியல் துறையை சேர்ந்த மாணவ, மாணவியர் 10பேர் காவல்துறையின் செயல்பாடுகள், இணையவழி குற்றங்கள், மதுவிலக்கு சட்டம் ஆகியவை குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
அவர்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று மாணவ, மாணவியர் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட எஸ்பி, பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரைகளை கூறினார். அப்போது டிஎஸ்பி அஸ்வினி உடனிருந்தார்.
The post காவல்துறை சட்டங்கள் மாணவர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.