- நாமக்கல்
- நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் பிரிவு
- எஸ்ஐ
- ஆறுமுக நாயனார்
- அட்டு கோவிந்தராஜ்
- பிரகாசம்
- காமாச்சி அம்மன் கோயில் தெரு
- பால்லிபாளையம் காந்திபுத்தூர்
- தின மலர்
நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ ஆறுமுக நயினார், ஏட்டுகள் கோவிந்தராஜ், பிரகாசம் ஆகியோர் பள்ளிபாளையம் கண்டிபுதூர், காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள பழைய தறி குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது குடோனில் 31 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 2,050 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கைபற்றினர்.
இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, பொது மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, டூவீலரில் கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, இட்லி மாவாக அரைத்து, பள்ளிபாளையத்தில் விசைத்தறி பட்டறையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.
The post 2,050 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.