- திட்டம்
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- தர்மபுரி யூனியன்
- லிதாரம்பட்டி
- ஏ. ஜெட்டிஅல்லி
- முதலமைச்சர் திட்டம்
- முகாம்
- தின மலர்
தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி மாவட்டத்தில் 15ம் தேதி முதல், ஒன்றியங்கள் வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் தர்மபுரி ஒன்றியத்தில் இலக்கியம்பட்டி மற்றும் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிகளில் திட்ட முகாம் நடந்தது. நேற்று 2வது நாளாக தர்மபுரி ஒன்றியத்தில் சோகத்தூர் மற்றும் அதகபாடி ஊராட்சி சார்பில் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். தாசில்தார் ஜெயசெல்வன், பிடிஓ கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை சோகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ஜடையன் மாது, அதகபாடி ஊராட்சி மன்ற தலைவர் பசுவராஜ், ஊராட்சி செயலர்கள் பால்ராஜ், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.