×

நேரு யுவகேந்திரா சார்பில் தர்மபுரி உழவர் சந்தையில் மாணவிகள் தூய்மை பணி

தர்மபுரி, அக்.29: தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், தீபாவளியுடன் மை பாரத் என்ற தலைப்பில், நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணி நடந்தது. நேரு யுவகேந்திரா பல்நோக்கு பணியாளர் முனியப்பன் தலைமை வகித்தார். தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை சுத்தம் செய்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தி, ஜோதிபாசு, ஹரிபிரசாத், கபில்தேவ், முருகன், பாவல்ராஜ், பசுபதி, வெற்றிவேல், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நேரு யுவகேந்திரா சார்பில் தர்மபுரி உழவர் சந்தையில் மாணவிகள் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Nehru Yuvakendra ,Dharmapuri District ,Nehru ,Yuvakendra ,Nehru Yuvkendra ,Yuvkendra ,Dharmapuri Farmers Market ,
× RELATED தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்