×
Saravana Stores

23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்தும், அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuga ,Supreme Leader ,Tamil Nadu ,
× RELATED சென்னை அசோக்நகரில் உள்ள...