புதுடெல்லி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா முதல்வராக பதவி ஏற்ற பிறகு இந்த மாதம் ஜூலை 4ம் தேதி சந்திரபாபுநாடு டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்தித்தார். தற்போது இந்த மாதம் 2ம் முறையாக சந்திரபாபுநாயுடு டெல்லி சென்றுள்ளார். 2 நாள் அங்கு தங்கியிருக்கும் அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை சந்தித்து 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
The post ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.