×
Saravana Stores

ஆனந்த் அம்பானி திருமணத்தில் வெடிகுண்டு மிரட்டல் இன்ஜினியர் கைது

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் நடந்தது. இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் எக்ஸ் தள பதிவு ஒன்றில், அம்பானியின் இல்ல திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால் நாளை பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என்று மனம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மும்பை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அம்பானியில் இல்ல திருமணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் போலீசார் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் விரால் ஷா என்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

The post ஆனந்த் அம்பானி திருமணத்தில் வெடிகுண்டு மிரட்டல் இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Anand Ambani ,Mukesh Ambani ,Dinakaran ,
× RELATED முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் நயன்தாரா பிசினஸ்