×
Saravana Stores

கர்நாடகாவில் நிலச்சரிவு 7 பேர் மண்ணில் புதைந்தனர்

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. வடகனரா மாவட்டத்தின் அங்கோலா தாலுகா ஷிரூரில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையோரத்தில் இருந்த பெட்டிக்கடை நிலச்சரிவில் புதைந்தது. 3 காஸ் டேங்கர்களை ஓட்டிவந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அந்த பெட்டிக்கடையருகே டேங்கர்களை நிறுத்திவிட்டு டீ குடித்துக்கொண்டிருந்தபோது தான் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிக்கடை நடத்தியவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் 3 டேங்கர் ஓட்டுநர்கள் என மொத்தம் 7 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேருடைய உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது. நிலச்சரிவில் காஸ் டேங்கர் லாரி ஒன்று அருலுள்ள கங்காவலி ஆற்றுக்குள் தள்ளப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

The post கர்நாடகாவில் நிலச்சரிவு 7 பேர் மண்ணில் புதைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Angola taluka Shirur ,North Kanara district ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை அருகே இன்று விபத்து;...